Connect with us

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்! கைது செய்து 4-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!!

பொழுதுபோக்கு

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்! கைது செய்து 4-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!!

நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்! கைது செய்து 4-ம் தேதி ஆஜர்படுத்த உத்தரவு!!

மாடலிங் துறையில் மிகவும் ஜொலித்துக் கொண்டு வருகிறார் மீராமிதுன். ஆனால் தற்போது இணையத்தில் அதிக அளவு சர்ச்சைக்குரிய நடிகையாக காணப்படுகிறார். ஏனென்றால் அவர் அடிக்கடி frank வீடியோவில் சிக்கிக் கொள்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் பெரும் பிரச்சினையை கிளப்புகிறது. அந்த வகையில் பட்டியிலினத்தவர்களை பற்றி கருத்து ஒன்றினை கூறியிருந்தார். இதற்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு தற்போது பிடிவாரன்ட் ஆக மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பட்டியிலினத்தவர்களை  குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரன்ட்  வழங்கப்பட்டுள்ளது.

பட்டியிலினத்தவர்களை  குறித்து அவதூறு வழக்கில் நடிகை கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top