Connect with us

சட்டப்பேரவையில் இன்று-மீண்டும் ‘மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’!!

மஞ்சப்பை

தமிழகம்

சட்டப்பேரவையில் இன்று-மீண்டும் ‘மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’!!

சட்டப்பேரவையில் இன்று-மீண்டும் ‘மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’!!

நம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகள் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அமைச்சர் மெய்யநாதன் சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பாண்டில் சுற்றுச்சூழல் துறை மேம்படுத்த பல்வேறு விதமான நலத்திட்டங்கள் உள்ளதாக தெரிகிறது.

நடப்பாண்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆயிரம் மரங்கள் அடங்கிய குறுங்காடுகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர்  மெய்யநாதன் கூறினார். புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, வேலூரில் விளையாட்டு மைதானங்கள் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கோயம்பேடு சந்தை வளாகம் கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் கூறினார். மேலும் அவர் சென்னையில் 2 கோடி செலவில் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்படும் என்றும் கூறினார்.

பசுமை இயக்கத்தின் நடைமுறைப்படுத்த 25,000 பசுமை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 13 கோடி ரூபாயில் மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் இரயில் கண்காட்சிக்கு செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top