மீண்டது குஷ்புவின் டுவிட்டர் பக்கம்: முதல் டுவிட்டிலேயே அதிரடி

09802ff856d0b1c0ff963c65d4a2ff1c

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டதை அடுத்து அவர் இதுகுறித்து சென்னை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினர். மேலும் குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சியின் காரணமாக தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டது. இதனை அடுத்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தை தற்போது பயன்படுத்தி வருகிறார். முதல் டுவிட்டிலேயே அவர் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்தல் மீராபாய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்த டுவீட்டில் தனது டுவிட்டர் பக்கத்தை மீட்க நடவடிக்கை எடுத்த டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது நன்றிகளை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் குஷ்புவின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அனைத்து டுவிட்டுகளும் மீட்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment