மீண்டும் அதிகரித்தது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்; 800 படுக்கைகள் தயார்!: அமைச்சர் சுப்பிரமணியன்

கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு மீண்டும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அங்கு ஒரு நாள் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு சென்னையில் பதிவாகியுள்ளது.

கொரோனா

இந்த நிலையில் தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி பேசியிருந்தார். அதன்படி சென்னையில் பாதிப்பு  அதிகரிப்பின் காரணமாக 800 படுக்கைகள் தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அதன்படி சென்னையில் தொற்று அதிகரிப்பால் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் 3 இடங்களில் தற்காலிக பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரித்துள்ளன என்று செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். ஒமைக்ரான் பாதித்த நாற்பத்தி ஐந்து பேருமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் என்பதால் குறைவான பாதிப்பு உள்ளது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment