மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம்: கலைவாணர் அரங்கத்தில் மஞ்சப்பை வழங்கினார் ஸ்டாலின்!

மனிதன் நாள் தோறும் வியக்கத்தக்க பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறான், அவற்றுள் ஒன்றுதான் பிளாஸ்டிக். இவை உணவு தொடங்கி பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சப்பை

குறிப்பாக துணிக்கடை, காய்கறிக் கடை என பல கடைகளுக்கு செல்லும் போதும் மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை அதிகம் உபயோகிக்கின்றனர். என்னதான் பிளாஸ்டிக் பல்வேறு பயன்களை தந்தாலும் அது ஒரு மக்காத பொருளாகும்.

இந்த பிளாஸ்டிக் மண்ணுக்குள் புதைந்து மழைநீர் மண்ணுக்குள் நுழைவதை தடுக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மக்கள் அனைவரும் பழைய நிலைக்கு திரும்பி கின்றனர். அதன் ஒன்றுதான் பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் முறை.

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மக்கள் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு இயக்கம் இன்று தொடங்கியுள்ளது.

மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கலைவாணர் அரங்கில் மாணவர்கள், பெண்கள், காவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மஞ்சப்பைகளை வழங்கினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment