ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை: அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகர்!

ad9dcba1a1652e7d694b7de46ecc92b0

தமிழ் திரை உலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாக அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான விஷால் அறிவித்துள்ளார் 

நடிகர் ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் தான் மாமா வாங்கி விட்டதாகவும் இதை அறிவிப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

மேலும் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஆர்யா தற்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக மாறி இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

நடிகர் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தந்தையாகி இருக்கும் இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.