திருச்சியில் பள்ளி கழிவறையில் ஆண் சிசு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பிறந்த சிசுக்களை தெரு ஓரங்கள், கழிவறைகளில் வீசி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த காட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!!
இங்கு பிறந்து சில பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிசுவின் உடலை அனுப்பி வைத்தனர். அதோடு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பள்ளி கழிவறையில் குழந்தை எவ்வாறு வந்தது? தவறான முறையில் பிறந்த குழந்தையா? போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
மேலும், பள்ளி வளாகங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணிப்பு கேமரக்கள் பொருத்த வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.