நடிகர் விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.இவர்களுடன் படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார்.
இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார். வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் – அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்துள்ளார் .
தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர் தில் ராஜுன் மனைவி அனிதா 2017ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார் . அவர்களுக்கு ஹன்ஷிதா ரெட்டி எனும் மகள் இருக்கிறார்.அடுத்ததாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி மறுமணம் செய்து கொண்டார் தில் ராஜு.
இரண்டவதாக தன்னை விட மிகவும் குறைந்த வயதுடைய தேஜஸ்வினி என்கிற வைகா ரெட்டியை திருமணம் செய்துகொண்டார்.
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போதே தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகியுள்ளது.இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு தனது குழந்தையுடன் இருக்கும் படம் தற்போழுது வைரலாகி வருகிறது.
இளையராஜாவின் பாட்டை மீண்டும் ரீமேக் செய்த யுவன்! இந்த படத்தில் தெரியுமா?
இதை பார்த்து ரசிகர்கள் திரை பிரபலங்கள் வைரலாக்கி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.