பாபர் மசூதி இடிப்பு தினம் போராட்டம்: இஸ்லாமியர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!

இந்தியாவில் ஆட்சி செய்த முதல் முகலாய மன்னர் பாபர். இவரின் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினம் நினைவுகூரப்படுகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் டிசம்பர் 6ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினம் அன்று போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீதான வழக்கு ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 7ஆம் தேதி ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு சேர்ந்த முகமது உமர் அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமை தான்; பாபர் மசூதி இடிப்பு தினம் இஸ்லாமியர்களின் மறக்க முடியாத நாள் என்று நீதிபதி கூறினார். பாபர் மசூதி இடிப்பு நாளில் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டதை சட்டவிரோதமாக பார்க்க முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

போராட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை; போராட்டம் அமைதியான முறையில் தான் நடைபெற்றது என்று நீதிபதி கூறினார். போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment