News
ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் பதஞ்சலி நிறுவனமா? பரபரப்பு தகவல்
இந்தியா சீனா நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து வீவோ நிறுவனம் விலகியது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 13வது ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய ஜியோ உள்பட பல முன்னணி நிறுவனங்கள் போட்டியில் இருக்கும்போது திடீரென பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
ஐபிஎல் போட்டியின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து வீவோ நிறுவனத்தை பிசிசிஐ சமீபத்தில் நீக்கியது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப் தேடுவதில் பிசிசிஐ மும்முரமாக இருந்து வருகிறது.
ஏற்கனவே ஆன்லைன் கல்வி செயலியான பைஜூஸ், குளிர்பான நிறுவனமான கோகோ கோலா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, அமேசான் ஆகியவை போட்டியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஆக இருக்க விரும்புகிறோம் என பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பதஞ்சலி நிறுவனத்தின் படைப்புகள் உலக உலகப் புகழ் பெற வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராக இருக்க விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்
ஐபிஎல் போட்டியின் ஸ்பான்சராக இருக்க பதஞ்சலி நிறுவனத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
