பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான்… 2வது 3வது இடம் யாருக்கு?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று இறுதிப்போட்டியில் நடைபெற்று வருகிறது என்றும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இன்று காலை முதலே இந்த சீசனின் கிராண்ட் பினாலே படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சற்று முன் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் இதில் அசீம் தான் டைட்டில் வின்னர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இரண்டாவது இடத்தில் விக்ரமன் மற்றும் மூன்றாவது இடத்தில் ஷிவின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனின் கிட்டத்தட்ட பாதியிலிருந்து விக்ரமன் தான் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம் பார்வையாளர்களுக்கு பெரும் பரப்பளவு ஏற்படுத்தி உள்ளது.

title winnerவிக்ரமனுக்கு அரசியல் கட்சி தலைவர் ஒருவர் ஆதரவு அளித்ததை அடுத்து அவருக்கு வாக்குகள் குறைந்ததாகவும் ஒரு ரியாலிட்டி ஷோவை அரசியல் ஆக்கியதை பார்வையாளர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. விக்ரமன் மிகவும் அமைதியானவர் அதே நேரத்தில் இந்த ஷோவுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கூறப்பட்டாலும் அவர் தேவையில்லாமல் ஒரு ரியாலிட்டி ஷோவில் தனது அரசியல் கட்சியின் கருத்துக்களை திணித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசனால் பலமுறை கண்டிக்கப்பட்டு ரெக்கார்டு கூட கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட அசீம் டைட்டில் வின்னர் என்பதையும் பார்வையாளர்களால் ஜீரணித்துக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு ஷிவினுக்கே டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்திருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது போல் டைட்டில் வின்னர் பட்டமும் எதிர்பாராமல் அசீமுக்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.