ஐயப்பனுக்கு மாலை அணிவித்தால் ஒழுக்கம் கட்டாயம் தேவை

விரைவில் கார்த்திகை மாதம் தொடங்க இருக்கிறது. கார்த்திகை மாதம் 1ம் தேதியாகிவிட்டாலே எல்லா பக்தர்களும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பயபக்தியாக இருப்பார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா குழப்பத்தால் ஐயப்பன் கோவிலுக்கு வரும் சராசரியான பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.

ஐயப்ப சாமி விரதம் என்பது மிகுந்த கண்ணியத்துடன் செய்யப்படும் ஒரு விரதமாகும். இந்த விரத முறையை கடைபிடிக்கும்போது துளியளவும் சுத்தம் தவறக்கூடாது. தற்போது உள்ள நாகரீக உலகில் இஷ்டத்துக்கு பலர் இந்த அய்யப்ப விரதத்தை கடைபிடித்தும், பகட்டுக்காக மாலை அணிந்தும் வந்தார்கள் மேலும் மது அருந்துவது, சிகரெட் குடிப்பது போன்றவற்றையும் நிறைய அய்யப்ப பக்தர்கள் எல்லை மீறி செய்து வந்தார்கள். இதனால்தானோ என்னவோ அய்யப்பன் இரண்டு வருடங்களாக அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்களையே பெருமளவில் அனுமதிக்கவில்லை தெய்வம் நின்று கொல்லும் என்பது இதுதான்.

அதனால் ஒழுக்கத்துடன் கூடிய அய்யப்ப விரதத்தை ஒழுக்கத்துடன் கடைபிடியுங்கள். உங்களால் சரியாக இருக்க முடியவில்லையா நீங்கள் அய்யப்ப விரதம் என்ற ஏரியாவுக்கே போகாதிங்க. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று, அது போல பக்தியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அதே நேரத்தில் தீய பழக்கங்கள், ஆசைகள் போன்றவற்றையும் விட மறுக்கிறார்கள் இப்படி செய்து அய்யப்ப விரதம் கடைபிடிப்பது மிக தவறு.

அய்யப்பனின் விரதத்தை முறைப்படி இருங்கள். எதையும் தவறாக செய்து உங்கள் கெட்ட கர்மாவின் பலத்தை மேலும் அதிகரிக்காதீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews