ஆயுத பூஜை எதிரொலி: பூக்கள் விலை கிடுகிடு அதிகரிப்பு..!!

இன்றைய தினத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி பண்டிக்கைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பூக்களின் தேவை கிடுகிடுவென அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நேற்றைய விலையிலேயே இன்றைய தினத்திலும் பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

மீண்டும் சோகம்!! கடன் செயலியால் இளைஞர் தற்கொலை..!!!

அதன் படி, மல்லிகைப்பூ ரூ.1,200 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ.200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ரூ.800 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் முல்லை ரூ.900-க்கும், அரளி பூ ரூ.500, கனகாம்பரம் ரூ.700 மற்றும் பட்டன் ரோஸ் ரூ.300-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை தொடர்ந்து செண்டு மல்லி ரூ.100-க்கும், செவ்வந்தி ரூ.300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த 3 நாட்களாக 100 டன் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

மேலும், கடந்த வருடத்தை விட நடப்பாண்டில் தேங்காய் தோரணங்கள் மற்றும் மா இலைகளின் விற்பனையானது சூடுப்பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.