அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு : வைரலாகும் புகைப்படம்

வரலாற்று புராதன நகரமான அயோத்தியில் இந்துக்களின் கடவுளாம் பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு கோவில் கட்டும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ல் தொடங்கி வைத்தார். உத்திரபிரதேச மாநிலத்தின் மற்றுமொரு அடையாளமாக விளங்கப் போகும் அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடைந்து கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.

வருகிற ஜனவரி 22-ல் இக்கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைக்கிறார். பெரும் பொருட்செலவில் ஆன்மீக நாட்டத்தை மக்களிடம் அதிகரிக்கும் வகையில் இந்தக் கோவிலானது கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது உத்திரபிரதேசத்தில் 2.5 கோடியாக உள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில், 392 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் வழியாக இக்கோவிலுக்குள் செல்ல முடியும். இதில் 14 கதவுகள் தங்கத்தாலானவை. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கற்களால் கோவில் கட்டப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் இருந்து மரம்; தெலுங்கானாவில் இருந்து எடுத்து வரப்பட்ட கிரானைட் கற்களை தமிழகத்தைச் சேர்ந்த தச்சர்கள் வடிவமைத்துள்ளனர்.

தற்போது இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக அழைப்பிதழ் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை மாநிலத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், முதல்வர் இல்லம், அரசியல், சமூகம், திரைத்துறை உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து வழங்குகின்றனர் அயோத்தி, ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா குழுவினர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

தனுஷ்- சிவ்ராஜ் கூட்டணியில் உருவான ‘கொரனாறு‘ பாடல் : புழுதி பறக்கும் கேப்டன் மில்லர் 3-வது சிங்கிள்

இந்நிலையில் இக்குழுவினர் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை வழங்கினர். இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.