விரைவில் கலக்க வருகிறார்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் கூட்டணி!!!

fb8784b767fa3f23def11a1a162a565e

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ‘இன்று நேற்று நாளை’. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் கருணாகரன் யோகிபாபு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏலியன்கள் மற்றும்  சயின்ஸ் பிக்ஷன் சார்ந்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் துவங்கி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அயலான்  படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் முடிந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

மேலும் அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  புற்களில் வடிவமைத்துள்ளனர். சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் படத்தின் அடுத்த கட்ட வேலைகள் இந்த வருட கடைசி வரை தொடரும் என்று கூறப்படுகிறது. எனவே 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு அயலான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.