அயலான் ஹீரோயினுக்கு கோவாவில் கோலாகல திருமணம்!.. மாப்பிள்ளை செம வெயிட் பார்ட்டியாமே!..

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ரகுல் பிரீத் சிங். இன்று அவருக்கு கோவாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. பட்டாசு வெடிக்காமல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தாமல் பசுமைத் திருமணமாக தனது திருமணத்தை நடத்தி இருக்கிறார்.

ரகுல் ப்ரீத் சிங் திருமணம்:

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக் பக்னானி என்பவரை தான் கரம் பிடித்திருக்கிறார். அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ராட்சசன், அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம், சரப்ஜித், கூலி நம்பர் ஒன், கடந்தாண்டு டைகர் ஷெராஃப் நடித்து வெளியான கணபத், கடந்த வாரம் வெளியான படே மியா சோட்டா மியான் என ஏகப்பட்ட அக்ஷய் குமார் படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் ஜாக் பக்னானிக்கும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்குக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.

Snapinsta.app 429170416 8049905551691369 8700103733738798139 n 1080

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனக்குள கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது ஆனந்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஹீரோயின் அயலான் பட ஹீரோயின்.

கோவாவில் கோலாகலம்:

தங்கள் திருமணத்தை வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவிலேயே இறுதியில் திருமணத்தை நடத்தி உள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து மணமக்களை வாழ்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Snapinsta.app 428253163 1440362106836786 3923292728050238005 n 1080

மணமகன் ஜாக் பக்னானி பாஜகவில் பெரும் செல்வாக்கு உடையவராகவும் திகழ்கிறார் என கூறுகின்றனர். ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்கள் தயாரிப்பாளர் ஜாக் பக்னானியுடன் ஏற்பட்ட காதல் காரணமாக அவரே திருமணம் செய்துகொண்டுள்ளார். சமீபத்தில், 4 கோடி ரூபாய்க்கு சொகுசு கார் ரகுல் பிரித் சிங் வாங்கியதும் காதலர் கொடுத்த அன்பு பரிசு தான் எனக் கூறுகின்றனர்.

Snapinsta.app 429125790 397574946187361 8355145409921179972 n 1080

அயலான் படத்தைத் தொடர்ந்து இந்தியன் 2 மற்றும் 3 உள்ளிட்ட படங்களிலும் ரகுல் பிரீத் சிங்கை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் பிங்க் நிற உடையில் பளிச்சென திருமண கோலத்தில் ஜொலி ஜொலித்தார். பீச் ரெசார்ட்டில் நெருங்கிய உணவர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...