பெங்களூருவில் புதிய உருமாற்றம் அடைந்த AY 4.2 கொரோனா! 7 பேர் பாதிப்பு!! 

இந்தியாவின் பெரும் முயற்சியால் கொரோனா பாதிப்பு  பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வோரின் எண்ணிக்கை பல நாடுகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிகமாக கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டது.

கொரோனா
 

இதனால் நம் இந்தியாவில் கொரோனா  நோய் கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .இந்த நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பரவ தொடங்கியதாக காணப்படுகிறது.

இந்த  புதிதாக உருமாறிய கொரோனா ஐரோப்பா நாடுகளில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.இதற்கு AY4.2 உருமாறிய கொரோனா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த AY4.2 உருமாறிய கொரோனா நம் இந்தியாவிலும் வரத் தொடங்கியதாக காணப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக கர்நாடக மாநிலத்தில்  AY4.2 உருமாறிய கொரோனா நோயின் தாக்கம் தென்பட்டுள்ளது. கர்நாடகாவின் மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உருமாற்றம் அடைந்த AY4.2 உருமாறிய கொரோனா நோய்க்கு  ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரு ஆய்வு மையத்தில் நடந்த சோதனையில் 7 பேருக்கு AY4.2 உருமாறிய கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை நம் தமிழகத்திற்கும் பரவ அதிக வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது. இது குறித்தும் நம் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் இரண்டு மாதங்களுக்கு தமிழகத்தில் கடினமான மாதமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment