மஞ்சுவிரட்டு பார்க்க வந்ததால் பரிதாபம்; மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு! 90 பேர் படுகாயம்!

நேற்றைய தினம் தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முடிவு பெற்றது. அதனால் இன்றைய தினம் பல மாவட்டங்களில் காணப்படுகிறது. இருப்பினும் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் பகுதியில் மஞ்சுவிரட்டு ஆரம்பித்துள்ளது.மஞ்சுவிரட்டு

இந்த திருமயம் மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ள மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  காளைகள்,மாடுகள் கொண்டு வரப்பட்டு பங்கேற்றன.

இந்த மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர்.  இதனை கண்டு மகிழ ஏராளமான ஜனக்கூட்டம் திருமயம் பகுதியில் கூடியுள்ளது.

இந்த நிலையில் தற்போது திருமயம்  மஞ்சுவிரட்டில் சோகம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி இந்த திருமயம் மஞ்சுவிரட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி திருமயம் விராச்சிலையில் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பார்வையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்தப் பார்வையாளர் குடும்பத்தில்  பெரும் சோகம் நிலவுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதனால் மஞ்சுவிரட்டு பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment