ஐபில் 2022 – ஏலத்தில் மயங்கிய தொகுப்பாளர் – என்னவா இருக்கும்?
உலகில் உள்ள அனைவரும் அதிகமாக பார்ப்பது என்றால் அது கிரிக்கெட் தான். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2022- ஆண்டிற்கான மெகா ஏலமானது பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் இலங்கை வீரர் ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்த போது
ஏலம் விடுபவர் மயக்கமடைந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது அரங்கில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவக்குழு அவரை அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர்.
அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இந்தியாவை சேர்ந்த சாரு சர்மா ஏலம் நடத்தியது குறிப்பிடதக்கது.
