பள்ளிகளிலேயே மாணவிகளுக்கு குழந்தை திருமணம் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு குழந்தை திருமணம் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக தேசிய தலைவர்களும் குழந்தை திருமணத்தில் தான் திருமணம் செய்து இருந்தார்கள். அதன் பின்னர் காலங்கள் செல்ல செல்ல குழந்தை திருமணம் தடுக்கப்பட்டு வந்தன. இந்த சூழலில் குழந்தை திருமண தடைச் சட்டமும் தற்போது அமலில் காணப்படுகிறது.

ஆயினும் ஆங்காங்கே குழந்தை திருமணம் இன்றளவும் நடந்து கொண்டுதான் உள்ளது என்பது மிகுந்த வேதனையான தகவலாக காணப்படுகிறது. இந்த சூழலில் பள்ளி கல்வித்துறை குழந்தை திருமணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை அனைத்து பள்ளி மாணவிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவினை பிறப்பித்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சுமார் 290 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் எடுத்துள்ளது. இதனால் ஒவ்வொரு பள்ளிகளிலும் இனி பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment