
தமிழகம்
வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு விருது: தமிழக முதல்வர் நேரில் சென்று வழங்கினார்..
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் சென்று தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி திமுக தலைமை செயலகமான அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் வந்து கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது. அதோடு பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திமுக அதிகார்வபூர்வமான நாளிதழான முரசொலி அலுவலகம் மற்றும் கோபாலப்புரம் ஆகிய பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மரியாதை செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைஞர் விருது, புகழ் பெற்ற வசன கர்த்தா ஆரூர்தாஸுக்கு வித்தகர் விருது போன்ற விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் கலைஞர் எழுதுகோள் விருது தினத்தந்தி எழுத்தாளர் சண்முகநாதனுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், புகழ்பெற்ற வசன கர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் இல்லத்திற்கு சென்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
