Connect with us

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு விருது! மூன்று பிரிவுகளில் மூன்று பரிசு!!

water management

News

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு விருது! மூன்று பிரிவுகளில் மூன்று பரிசு!!

நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு விருது! மூன்று பிரிவுகளில் மூன்று பரிசு!!

நம் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி நடந்து கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக காணப்படுகிறது.

அதுவும் வளர்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு தரமான இடம் ஒன்று எப்போதும் கிடைத்திருக்கும். இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது நீர் மேலாண்மைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய நீர் மேலாண்மையில் 3 ஆவது மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு விருது வழங்கினார் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெராவத்.

செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளபுதூர் ஊராட்சிக்கு சிறந்த கிராம பஞ்சாயத்துக்கான இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பள்ளி பிரிவில் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு தொடர்ந்து மூன்று பரிசுகள் கிடைத்துள்ளது நாம் பெருமிதம் கொள்ள வேண்டியதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top