தமிழ் சினிமாவில் இதுவரை தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்தவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் வெளியான சென்னை 28 படம் வெற்றி பெற்றிருந்தாலும், அதனை தொடர்ந்து வெளியான படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனால் அவருக்கென ஒரு நிலையான இடம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் வரலாறு காணாத வெற்றி பெற்றதே என்றே கூறலாம். யாருமே எதிர்பாராத வகையில் இந்த படம் வெற்றி பெற்று அனைத்து நடிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது.
டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த மாநாடு படத்தில் சிம்பு தவிர எஸ்.ஜே சூர்யா கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜப்பானிய மக்களிடையே மாநாடு படம் வரவேற்பை பெற்றதோடு நல்ல வசூலையும் பெற்றது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரி குவித்த மாநாடு படம் வெங்கட்பிரபு மற்றும் சிம்புவிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில், மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டுடியோ பிளிக்ஸ் என்ற நிறுவனம் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. அதில், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் மற்றும் எடிட்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் மாநாடு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விருதுக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வெங்கட்பிரபு டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.