அட்ராசக்க…! இனி ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளிலும் கிடைக்கும்…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என சட்டப்பேரைவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரைவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர்  மானிய கோரிக்கை விவாதத்தில் கூறியுள்ளார்.

ஆவின் நிறுவனம் பல்வேறு இடங்களில் பால், தயிர், இனிப்பு வகைகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் காலங்களில் ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.

அதேபோல், நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு பத்து வகையான  இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

மேலும், தொடக்க பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஊதிய நிர்ணயம், பணிவர முறை போன்ற பலத்தரப்பட்ட கோரிக்கைகளை பரீசனை செய்ய குழு அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment