Connect with us

புதிய உச்சத்தை தொட்ட விமான எரிபொருள்!! 18 சதவீதமாக விலை உயர்வு!!

flight

செய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட விமான எரிபொருள்!! 18 சதவீதமாக விலை உயர்வு!!

புதிய உச்சத்தை தொட்ட விமான எரிபொருள்!! 18 சதவீதமாக விலை உயர்வு!!

தினந்தோறும் அனைத்து விதமான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விமான எரிபொருளின் விலை தினம்தோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விமான எரிபொருள் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி விமான எரிபொருள் விலை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 18 சதவீதம் உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ மீட்டர் அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருள் ரூபாய் 17135 அதிகரித்து ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 666 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்த நிலையில் விலை உயர்வு காணப்படுகிறது. கடந்த வாரம் முதல் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நிகழ்ந்து வருவதால் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதியிலிருந்து ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை மொத்தம் 36 ஆயிரத்து 643 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் ஒன்றாம் தேதி மற்றும் 16ம் தேதியில் விமான எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top