ஹாலிவுட்டை பொறுத்த வரையில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெரமி ரெனர். இவர் தி அரைவல், அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள், Hawk Eye வெப் தொடர், கேப்டன் அமெரிக்கா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரது நடிப்பின் திறமைக்காக ‘சிறந்த நடிகர்’ என்ற விருது மற்றும் கடந்த 2008-ம் ஆண்டு 2 முறை ஆஸ்கார் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் பனிக்காலம் தொடங்கி உள்ளதால் நெவாடா மாகாணத்தின் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த பனியை அகற்றும்போது விபத்து ஏற்பட்டதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடிகர் ஜெரமி ரெனர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிகிறது. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கவனித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. ரெனரின் நிலைமையை அறிந்த அவருடைய ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேணும் என பிராத்தணை செய்து வருகின்றனர்.