அவதாருக்கும் அபூர்வ சகோதரர்களுக்கும் வித்தியாசம் என்ன?

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். கமலின் நடிப்புலக வரலாற்றில் இப்படம் முக்கிய பங்கு வகித்த படமாகும்.

இந்த படத்தில் கமல் மிகவும் குள்ளமான ஒரு வேடத்தில் நடித்து இருந்தார் இந்த வேடம் மிகவும் புகழ்பெற்றது.

இந்த வேடத்தில் நடித்த கமல் தன் தந்தையை கொன்றவர்களை மிக தந்திரமாக பலிவாங்கும் நபராக நடித்திருந்தார்.

குள்ள கமல் என்று அப்போதைய நேரத்தில் அந்த வேடம் ரசித்து பாராட்டப்பட்டது. அந்த வேடம் எப்படி கமல்ஹாசன் செய்தார் என்றே இதுவரை தெரியாத ரகசியம்.

அதற்கு முன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒரு சிறுவனை மகிழ்விப்பதற்காக குள்ளனாக வருவார்.

அந்த கதாபாத்திரத்தையே அபூர்வ சகோதரர்கள் முக்கிய பாத்திரமாக படத்தில் முழுவதுமாக செய்தார் கமல்.

இந்த பாத்திரத்தை டுவிட்டரில் பாராட்டும் அவரது ரசிகர்கள் அவதார் எப்படி எடுத்தார் னு கூட சொல்லி விடலாம்…. ஆனா, எங்க அப்பு வ எப்படி எடுத்தார்னு யாராலயும் சொல்ல முடியாது என கூறி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment