2 நாட்களில் ரூ.3600 கோடி வசூல்.. அவதார் 2 படத்தின் ஆச்சரியமான தகவல்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றாலும் இந்த படத்தில் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளை அற்புதமாக இருந்ததாகவும் அந்த காட்சிகளுக்காகவே படம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்திற்கு குடும்பம் குடும்பமாக கூட்டங்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

avatar 1இந்த நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 3,600 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவதார் படத்தின் முதல் பாகத்தின் வசூலைப் இன்னும் எந்த படமும் முறியடிக்காத நிலையில் ‘அவதார் 2’ இந்த வசூலை முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் தொடர்ந்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வசூலை வாரி குவித்து வருவதாகவும் இந்த படம் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.