அவதார்-2 படத்தின் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர்.. இது ஒரு புதுவித அனுபவம்!!…

அவதார் படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. சினிமா வாழ்வின் ஒரு சகாப்தம் என அவதார் படத்தை கூறலாம்.

avathar

மொத்த ரசிகர்களையும் கட்டி இழுத்த அனிமேஷன் படமான அவதார் உலகில் மிக அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த படம் அமெரிக்க மதிப்பில் 2500 மில்லியன் டாலர்களை வசூல் செய்து அசத்தியுள்ளது .

முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் அப்பொழுதே இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். ஆனால் இந்த இரண்டாம் பாகம் உருவாக 13 ஆண்டுகள் ஆகிவிட்டன.

797774

சமீபத்தில் அவதார் இரண்டிற்கான அப்டேட்டும் அதன் புதிய பெயரும் வெளியானது. அதன்படி இந்த பாகத்திற்கு ‘தி வாட்டர் ஆஃபி வே ‘ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் பாகத்தில் கடற்கரை மற்றும் கடலுக்குள் நடக்கும் காட்சியாகவும் , கடல் விலங்குகளை வைத்து நடக்கும் சம்பவங்களை கொண்டதாகவும் இருக்கும் என தெரிகிறது.இந்த படத்தில் கிட்டத்தட்ட 160 க்கும் மேற்பட்ட மொழிகளில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

கச்சதீவு குத்தகைக்கு விட போறீங்களா !! முழு தகவல் இதோ ..

download 95

இந்த படத்தின் டிரைலர் கடந்த மே 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று தான் அது வெளியாகி உள்ளது. பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளும் , வியக்கத்தக்க மிதமிஞ்சிய கற்பனையில் பிரமிக்க வைக்கும் விலங்குகள் என ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது இந்த டிரெய்லர். ரசிகர்களை வெகுவாக ஈர்த்த அவதார் முன்னோட்டம் இதோ…

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment