பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியாகி பம்பர் ஹிட் அடித்த படம் அவதார் என்றே கூறலாம். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமில்லாமல் வசூலிலும் மாஸ் காட்டியது.
இந்நிலையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 16-ல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
கிட்டத்தட்ட 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் ‘தி வே ஆஃப் வாட்டர்’ படம் வெளியானது. இப்படம் வெளியாகி 3 நாட்களில் ரூ.160 கோடியை வசூலித்தாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே திரைக்கு வந்து 10 நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும் ரூ.7,000 ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் இந்தியாவில் ரூ.300 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகையை முன்னிட்டு வசூலி கூடுதலாக அதிகரிக்கலாம் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
#AvatarTheWayOfWater crosses $600 Million Internationally and $250 Million at the North America Box office..
$850 Million Total..
— Ramesh Bala (@rameshlaus) December 25, 2022