‘அவதார் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான அவதார் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்தது என்பது தெரிந்ததே. 25 கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அவதார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்த அவதார் படத்தின் நான்கு பாகங்களை வெளியிடவும் முடிவு செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment