தென் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற விளையாட்டாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு இந்த விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக போற்றப்படுகிறது.
இந்த விளையாட்டு கடந்த 2016ல் உச்சநீதிமன்ற தீர்ப்பால் தடைபட்டபோது தமிழர்கள் அனைவரும் சேர்ந்து சென்னை மெரினாவில் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினர்.
அதன் பின் ஜல்லிக்கட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி தடைபடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் இந்த வருடம் கண்டிப்பாய் ஜல்லிக்கட்டு நடக்கும் கட்டுப்பாடுகளுடனாவது நடக்கும் என கூறினார்.
ஜல்லிக்கட்டு நடக்கும் என தெரிவித்ததால் வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் மூலம் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என தெரிகிறது.