ஆவணி கிருத்திகை விரதத்தினை மேற்கொள்வது எப்படி?

e31ba161b180ecb69925564d719668f8

முருகப் பெருமானுக்கு உகந்த மாதங்களில் ஒன்று ஆவணி மாதம், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை அன்று முருகனை வழிபட்டால் அனைத்துவகையான செல்வங்களையும் நாம் பெற முடியும்.

அத்தகைய சிறப்புமிக்க ஆவணி கிருத்திகை விரதத்தினை எவ்வாறு கடைபிடிப்பது என்று இப்போது பார்க்கலாம்.
காலை 6 மணிக்கு எழுந்து காலையிலேயே வீட்டினை சுத்தம் செய்துவிட வேண்டும், மேலும் பூஜை அறையினை தண்ணீர்விட்டு கழுவவும். மேலும் பூஜை அறையில் உள்ள கடவுளின் படங்களை வெள்ளை நிறப் புதுத் துணியால் துடைக்கவும்.

மேலும் சாமந்திப் பூக்களால் மாலையினை வீட்டிலேயே தயாரித்து முருகப்பெருமான் படத்திற்கு சாற்றவும், அடுத்து சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் போன்றவற்றினை வீட்டிலேயே தயாரித்து அத்துடன் மாம்பழம், கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு எனப் பல வகைகள் வைத்துப் படைக்கவும்.

அடுத்து செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா பூக்கள் என அனைத்துவகையான பூக்களை தண்ணீர்மீது பர்ப்பின் முருகன்மீது வைக்கவும், அடுத்து தீபத்தை ஏற்றவும்.

அடுத்து தீபம் ஏற்றி, விரதத்தினை பால், பழம் சாப்பிட்டு முடிக்கவும், மேலும் விரதத்தினை முடிக்கும் முன்னர் கந்த சஷ்டி கவசப் பாடல்களைப் பாடி முடித்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.