Connect with us

ஓலா, ஊபருக்கு தடை விதிங்க… ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவேசம்… வெடித்தது போராட்டம்!

Ola Uber

தமிழகம்

ஓலா, ஊபருக்கு தடை விதிங்க… ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவேசம்… வெடித்தது போராட்டம்!

ஓலா, ஊபருக்கு தடை விதிங்க… ஆட்டோ ஓட்டுநர்கள் ஆவேசம்… வெடித்தது போராட்டம்!

ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலியை தடை செய்ய வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஐடியு மாநில துணைத்தலைவர் S.k மகேந்திரன், எரிப்பொருள் விலை உயர்வுக்கு ஏற்றாற்போல் 3 மாதத்திற்க்கு ஒருமுறை புதிய மீட்டர் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலியை தடை செய்ய வேண்டும் என கூறிய அவர் இதற்கு மாற்றாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு என தனி செயலியை அரசே உருவாக்க வேண்டும் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வு உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்மில் 15 சதவீதம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top