Connect with us

ஆட்டோ கட்டணங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆட்டோ

தமிழகம்

ஆட்டோ கட்டணங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆட்டோ கட்டணங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் பயணிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இன்று அமலுக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கடந்த 2013-ம் ஆண்டில் அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போல எதிர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்ட போதும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து  இரு தரப்பு  விவாதங்களை ஆலோசனை செய்த நீதிபதிகள்  மீட்டர் பொருத்தி இருந்த போதும் அவை செயல்படுகிறதா என்பதை போக்குவரத்து காவல் துறையினர் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், நிலையற்ற பெட்ரோல், டீசல் விலையால் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் பயனாளிகள் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top