Connect with us

வங்கிகளில் ஆட்டோ டெபிட் வசதியில் நாளை முதல் மாற்றம்!

auto debit

News

வங்கிகளில் ஆட்டோ டெபிட் வசதியில் நாளை முதல் மாற்றம்!

வங்கிகளில் ஆட்டோ டெபிட் வசதியில் நாளை முதல் மாற்றம்!

வங்கிகளில் நாளை முதல் அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி இருந்தது என்பதும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் ரெகுலராக செலுத்தவேண்டிய பணத்தை ஆட்டோ டெபிட் மூலம் செலுத்த அனுமதி அளித்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆட்டோ டெபிட் வசதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பயனாளர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே ஆட்டோ டெபிட் மூலம் பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்பாக பயனாளிகளிடம் எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் அந்த பண பரிவர்த்தனைக்கு அனுமதி அளித்த பின்னர்தான் ஆட்டோ டெபிட் வரவு வைக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆட்டோ டெபிட் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து ரிசர்வ் வங்கி இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top