பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றுக!! கண்டிப்பாக ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த வேண்டும்!!
நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.
தினசரி பெட்ரோல், டீசல் விலை சராசரியாக 70 காசுகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல்வேறு விதமான வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை காரணமாக கருதி ஆட்டோ உரிமையாளர்கள் பலர் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை கூறி உள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டண மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை அரசு மாற்றியமைக்க வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.
ஆட்டோ உரிமையாளர்கள், பயணிகள் பயன்பெற கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ஹை கோர்ட் நீதிபதிகள் கூறினர். ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்ற வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் தரும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் ஹை கோர்ட் கூறியுள்ளது. அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அதிக செலவாகும் என்பதால் ஆட்டோக்களில் பிரிண்டர் பொருத்தமில்லை என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மீட்டர் பொருத்தும் அதை செயல்படுத்த ஆட்டோவை திடீர் சோதனைகள் மூலம் அரசு கண்டறிய வேண்டுமென்று ஹை கோர்ட் கூறியுள்ளது. ஆட்டோவில் மீட்டர் பொருத்த வேண்டும் என்பதே அமல்படுத்த கோரி ராமமூர்த்தி வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
