Connect with us

மே 1ஆம் தேதியிலிருந்து கேரளாவில் ஆட்டோ, பேருந்துகளின் கட்டணம் உயர்வு…!!

ஆட்டோ

செய்திகள்

மே 1ஆம் தேதியிலிருந்து கேரளாவில் ஆட்டோ, பேருந்துகளின் கட்டணம் உயர்வு…!!

மே 1ஆம் தேதியிலிருந்து கேரளாவில் ஆட்டோ, பேருந்துகளின் கட்டணம் உயர்வு…!!

தற்போது இந்தியாவெங்கும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இதன் காரணமாக அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ விலையானது அதிகரிக்க தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திலும் இதுபோன்று விலை உயர்வை அமல்படுத்த மாநில அமைச்சரவை கூட்டம் முடிவெடுத்துள்ளது. அதன்படி வருகின்ற ஒன்றாம் தேதி முதல் கேரளாவில் ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் விலை உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதால் பேருந்து மற்றும் ஆட்டோ கட்டணத்தின் விலையை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கேரளாவில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆட்டோ கட்டணங்கள் குறைந்தபட்சம் 25 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கனரக வாகனங்களின் குறைந்தபட்ச கட்டணம் 200 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் கிலோமீட்டர்களுக்கு 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணமும் கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top