டிம் பெய்னை ஓரம் தள்ளிய ஆஸ்திரேலியா; புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் உதயம்!

2019 t20 வேர்ல்டு  கப்பை முதன்முறையாக வென்றது ஆஸ்திரேலியா அணி. இந்த உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் மிக சிறந்த பெயர் பெற்ற வேகப்பந்து வீச்சாளராக பேட் கம்மின்ஸ் விளங்கி வருகிறார்.

டிம் பெய்ன்  பேட் கம்மின்ஸ்

அவர் பேட்டிங்கிலும் தன் கவனத்தை செலுத்திக் கொண்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கேப்டனாக இருந்த டிம் பெய்ன் பாலியல் தொல்லை காரணமாக அவரின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலியாவின் நடப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் பேட் கம்மின்ஸ்.ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் வருகின்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன் இடம்பெற மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனது பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்ததன் மூலம் சில நாட்களுக்கு  டிம் பெய்ன் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் அவரின் பெயர் ஆஷஸ் தொடரில் இடம் பெற வாய்ப்பில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment