இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் ருசிகரமான செயல் கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகர் ராட் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ரசிகை நாட்டிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.
அதன்படி இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்த காதலை வெளிப்படுத்தினார் இங்கிலாந்து அணியின் ரசிகர் ராட். இதனை ஏற்றுக்கொண்டார் ஆஸ்திரேலிய அணியின் ரசிகை.
இதனால் அவர்கள் தற்போது காதலர்களாக உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் நண்பர்களாக இருந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2017-2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ரசிகை நாட்டை முதன்முதலில் சந்தித்துள்ளார் இங்கிலாந்து ரசிகர் ராட்.
அதன் பின்னர் இவர்கள் நண்பர்களாக மாறி இருந்தனர். இந்த நிலையில் மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்தி, அதனை ஏற்றுக்கொண்ட பின்னர் காதலர்களாக உருவாக்கியுள்ளன.