இன்றைய தினம் t20 வேர்ல்டு கப் இறுதிப் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இன்று இரண்டு அணிகளும் மிகுந்த எதிர்பார்ப்போடு களமிறங்கின.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்திருந்தது. இதில் கேப்டன் வில்லியம்சன் 85 ரன்களை எடுத்திருந்தார்.
இதனால் 173 என்ற பெரிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சறுக்கல் உருவானது, ஏனென்றால் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் வார்னர்-மிச்செல் மார்ஸ் இவர்கள் கூட்டணி நியூசிலாந்து பந்துவீச்சை அடித்து தும்சம் பண்ணியது. அதன் பின்னர் வார்னர் ஆட்டமிழக்க இறுதி வரை ஆட்டமிழக்காமல் மிச்செல் மார்ஸ் களத்தில் இருந்தார்.
தங்களது இலக்கை 18.5 வது ஓவரில் தாண்டி t20 உலக கோப்பையை முதன்முறையாக ஆஸ்திரேலியா அணி வென்றது. அதோடு மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா ஏற்கனவே 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவருக்கான உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வென்றதும் குறிப்பிடத்தக்கது.
ஐசிசி தொடரில் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா நுழைந்தால் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றி பெறும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.