வெஸ்ட் இண்டீசை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா! நடையை கட்டிய பிராவோ; முன்னேறிய ஆஸ்திரேலியா!!

இன்றைய தினம் வேர்ல்டு கப் டி20 போட்டி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

WI

அதிகமாக அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெரான் பொலார்ட் 44 ரன்கள் அடித்திருந்தார். இதனால் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற முனைப்போடு இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.

வார்னர்

ஆஸ்திரேலியா தனது தொடக்க முதலே அதிரடியை காட்டியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தான் ஆட்டமிழக்காமல் 89 ரன்களை எடுத்தார். இதனால் 16.1 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

இதனால் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதோடு மட்டுமில்லாமல் மேற்கிந்திய அணிகளின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோவிற்கு இதுவே கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய அணி 5 போட்டியில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment