Connect with us

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல்… கடந்த ஆண்டை விட 28% அமோகம்!!!

gst

செய்திகள்

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல்… கடந்த ஆண்டை விட 28% அமோகம்!!!

கடந்த சில நாட்களாக நம் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக ஜிஎஸ்டி வரி அமைந்துள்ளது.
அதன் படி, ஒவ்வொரு பொருளுக்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்து நிதி அமைச்சம் தகவல் வெளியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் படி, தற்போது நிதி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் 2022-இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,43,612 கோடிகள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 28% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

மேலும், தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top