Connect with us

ஆகஸ்ட் 1 முதல் 6ஆம் வகுப்பு முதல் பள்ளி திறப்பு: அதிரடி உத்தரவு

News

ஆகஸ்ட் 1 முதல் 6ஆம் வகுப்பு முதல் பள்ளி திறப்பு: அதிரடி உத்தரவு

a0d2b713cd264c3c68cce6e8a30984f1

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தற்போது ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலமும் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாக பள்ளிகள் அனைத்தும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சானிடைசர் வைத்து பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

மேலும் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 

ஒருசில மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடக்க தொடங்கி உள்ள நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top