Connect with us

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு!!

Capture 3

தமிழகம்

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கிராமங்களில் ஊரக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்து இருந்தார்.

இந்த கூட்டத்தில் கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பல்வேறு குறைகளை கண்டறிதல் போன்றவைகள் கிராம சபை  கூட்டங்களில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கிராம சபை குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி, வருகின்ற ஆகஸ்ட் 15 -ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் ஆட்சியரிடம் அனுப்ப வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top