இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறை இணைந்து நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு . தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிம்பு தனது உடல் எடையை முற்றிலுமாக குறைத்து 17 வயது சிறுவன் போல காட்சி அளித்தார்.
இந்த படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சிம்புவின் கேரக்டர் முற்றிலும் மாறுபட்ட கேரக்டராம். மேலும் இப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.
இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானியும், ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.சிம்புவின் இந்த திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.சமீபத்தில் சிலம்பரசன் மற்றும் ஹீரோயின் சித்தி இத்னானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெந்து தனித்து காடு படத்திற்கு டப்பிங் பேசி முடித்ததாக அப்டேட் செய்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் பற்றிய மாசான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவல் தான் அது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீடு செப்டம்பர் 2 ஆம் தேதி,பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் 61 படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் லுக்! பிரபல Technician பகிர்ந்த லேட்டஸ்ட் Post!
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் இந்த நிகழ்விற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைமை விருந்தினராக வருவார் என கூறப்படுகிறது. இரண்டு பாடல்களும் டிரைலரும் ஒரே நாளில் வெளியாகயுள்ளது. விழா மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தை தெலுங்கிலும் டப் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.