பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு: பார்க்க வந்த பார்வையாளர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பொதுவாக தமிழர்கள் என்றாலே வீரர்கள் என்று அழைப்பர். ஏனென்றால் அவர்கள் செயல்கள் மட்டுமின்றி விளையாட்டுகளும் கூட வீர விளையாட்டாகவே விளையாடுவர். அவைகளில் ஜல்லிக்கட்டு என்பது மிகவும் பிரதான வீர விளையாட்டாக காணப்படுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு பொதுவாக மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும். அந்த வகையில் இன்றைய தினம் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி சீரும் சிறப்புமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் துணிவோடு சென்று அடக்கி பல்வேறு பரிசுகளை அல்லி செல்வர். ஆயினும் கூட ஆங்காங்கே வீரர்களுக்கு காயங்கள் ஏற்படும் ஒரு சில நேரங்களில் வீரர்களின் உயிர் இழப்பும் ஏற்பட வாய்ப்பு காணப்படுகிறது.

அந்த வகையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளின் அடக்கிய வீரர் அரவிந்த் என்பவர் மாடு முட்டியதில்  உயிரிழந்தார். இந்த சூழலில் மற்றும் ஒரு இடத்தில் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

அந்த படி திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்ற பார்வையாளர் உயிரிழந்துள்ளார். காளை முட்டியதில் படுகாயம் அடைந்த அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.