மது பிரியர்கள் கவனத்திற்கு! போலீசார் கடும் எச்சரிக்கை..!!

புத்தாண்டை முன்னிட்டு கடலூர் – புதுச்சேரி எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருச்சியில் பரபரப்பு! தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து… நூலிழையில் தப்பித்த பயணிகள்!!

இந்நிலையில் 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 8 துணை கண்காணிப்பாளர்கள், 33 காவல் ஆய்வாளர்கள், 231 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

அதே போல் மாவட்டம் முழுவதும் 84 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழகத்தை விட புதுச்சேரியில் மது பாட்டில்களின் விலை குறைவு என்பதால் அங்கிருந்து மதுகடத்தல் அதிகமாக இருக்கும்.

குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் உயிரிழப்பு!!

இதனை தடுக்கும் விதமாக சோதனையானது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அளவுக்கு அதிகமாக மதுபாட்டில்கள் எடுத்து வந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.