Connect with us

மக்களே கவனம்!!! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

rain chennai4101 1638687228 2

தமிழகம்

மக்களே கவனம்!!! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

மக்களே கவனம்!!! 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் 3 நாட்களுக்கு  லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிட கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகின்ற 15, 16-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top