
தமிழகம்
நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!!
நம் தமிழகத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வருவதால் பள்ளி மாணவகள் சுவர் ஏறி குதிப்பதும், வீடுதிரும்பி செல்வதும் போன்ற செயல்களில் ஈடுப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவற்றை தடுக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு போடவேண்டும் என கூறியுள்ளது.
குறிப்பாக ஆசிரியர்கள் காலை 10-மணிக்கு மேல் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அவ்வாறு வரும் பட்சத்தில் அன்றைய தினத்தில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூறியுள்ளது.
அதோடு பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
